Showing posts with label TNEA 2020. Show all posts
Showing posts with label TNEA 2020. Show all posts

Monday, 28 September 2020

ANNA UNIVERSITY RANK LIST ( TNEA 2020 RANK LIST) Published

 அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல்(BE) கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியல்(RANK LIST) இன்று மாலை (28.09.2020) 6 மணிக்கு வெளியிடப்பட்டது 

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று மாலை உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கே.பி. அன்பழகன் அவர்களால் வெளியிடப்பட்டது. 

 

மாணவர்கள் https://www.tneaonline.org என்ற இணையதள பக்கத்தில் தங்களுடைய அக்கவுண்ட்டில் Login செய்து  தங்களுடைய Rank என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Wednesday, 16 September 2020

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல்(BE) கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியல்(RANK LIST) செப்டம்பர் 25ல் வெளியீடு

 ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------  

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு

 அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பில் உள்ள 523 பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு (TamilNadu Engineering Admission  Counselling 2020) விரைவில் நடைபெறவுள்ளது. 

 

கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டது. தற்போது ஆன்லைனில் வழியாகவே சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் https://www.tneaonline.org என்ற இணையதள பக்கத்தில் தங்களுடைய அக்கவுண்ட்டில் Login செய்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு விட்டதா என்று உறுதி செய்யலாம். 

 

ஏற்கனவே மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் (Rank List) செப்டம்பர் 17ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

 

இந்நிலையில், மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய மேலும் அவகாசம் அளிக்கும் வகையில் தரவரிசைப்பட்டியல் செப்டம்பர் 25ல் வெளியிடப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் திரு கே.பி.அன்பழகன்  செய்தி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். தரவரிசைப்பட்டியல் வெளியிட்ட பிறகே கலந்தாய்வு தேதி அட்டவணை (Counselling Schedule) அறிவிக்கப்படும்.

 

சந்தேகங்கள் இருப்பின் மாணவர்கள் 044-22351014, 22351015 என்ற உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.