------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று(18.09.2020) வெளியிடப்பட்டது. 23.09.2020, 24.09.2020 மற்றும் 25.09.2020 ஆகிய நாட்களில் பொது விண்ணப்பதாரர்களுக்குக் கலந்தாய்வு நடக்கவுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாகின் செய்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
https://www.skilltraining.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள 25 தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவுகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் கலந்தாய்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 3 நாட்கள் அவகாசத்திற்குள் தங்கள் முன்னுரிமை வரிசைகளில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
கலந்தாய்வுக்குப் பின் தற்காலிகச் சேர்க்கை ஆணை வழங்கப்பட்டு ஆன்லைன் மூலமாகச் சேர்க்கைக் கட்டணம் பெறப்பட்டு, சேர்க்கை உறுதி செய்யப்படும்.
இது தொடர்பாகச் சந்தேகங்கள் ஏதும் இருப்பின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: http://nimiprojects.in/det-onlineadmission/
தொலைபேசி எண்கள்: 94990 55612, 94990 55618
இ-மெயில்: onlineitiadmission@gmail.com
No comments:
Post a Comment